லங்கா பிரிமியர் லீக்கில் இரு இந்திய வீரர்க்ள் – யார் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:36 IST)
லங்கா பிரிமியர் லீக்கில் இந்தியாவைச் சேர்ந்த் இர்பான் பதான் மற்றும் மன்பிரீத் சிங் கோனி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை ஆரம்பித்து பணமழைக் கொட்ட ஆரம்பித்ததும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அது போல பிரிமியர் தொடர்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதில் எதிலும் இந்திய வீரர்கள் கலந்துகொள்வதில்லை. அதற்கு பிசிசிஐ அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் அதில் கலந்துகொள்ளலாம்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர்களான இர்பான் பதான் மற்றும் மன் பிரீத் சிங் கோனி ஆகியோர் இலங்கையில் நடக்கும் லங்கா பிரிமீயர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ளனர். அங்கே அவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்