தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு

செவ்வாய், 17 நவம்பர் 2020 (07:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டி விட்ட நிலையில் அமெரிக்கா ரஷ்யா உள்பட ஒருசில நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உள்ளனர் 
 
ஒருசில நாடுகள் கிட்டத்தட்ட தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இது குறித்து கூறிய போது தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் 
 
தடுப்பூசி கண்டுபிடித்தாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைகளை தொடர வேண்டும் என்றும் தடுப்பூசியால் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார் 
 
மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு உடனடி ஆக பயன்படுத்தப்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்