ஐபிஎல்-2023:ராஜஸ்தானுக்கு எளிய வெற்றி இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (21:21 IST)
ஐபிஎல் -2023- 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி மோதுகின்றது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்தது. இதில்,  தொடக்க அணி வீரர்களாக  கேப்டன் கே.எல்.ராகுல் மற்றூம் கேல் இருவரும் களமிறங்கினர்.

கே.ஏல்.ராகுல் 39 ரன்களும், கேல் 51 ரன்களும்,  ஸ்டோன்ஸ் 21 ரன்களும், நிகோலஸ் 29 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், இந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்கள் எடுத்து,  லக்னோ அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் அணி தரப்பில்,  டிரென்ட், ஷர்மா, ஹோல்டர் தலா 1 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்