வெறும் 2 கோடிக்கு விலைபோன வில்லியம்சன்! சுட்டிக்குழந்தைக்கு செம கிராக்கி!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:29 IST)
கொச்சியில் ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் தொடங்கியுள்ள நிலையில் வீரர்கள் பேரம் பரபரப்பாக நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியிலிருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன.

அந்த வீரர்கள் மீதான மினி ஏலம் இன்று கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஏலத்தின் தொடக்கத்திலேயே கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.12 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் அணி ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மயங்க் அகர்வாலையும் சன்ரைசர்ஸ் அணி ரூ.8.25 கோடி செலவு செய்து வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விடுவித்த ரஹானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வீரர் ரைலி ரூசோவை எந்த அணியிம் ஏலத்தில் எடுக்கவில்லை. சாம் கரனை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியாக பஞ்சாப் அணி ரூ.18.25 கோடிக்கு சுட்டிக்குழந்தை சாம்கரணை ஏலத்தில் வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல்லில் எடுக்கப்பட்ட ஏலத்திலேயே இது மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்