16வது ஐபிஎல்: இன்று மினி ஏலம்.. சாம் கர்ரனுக்கு எத்தனை கோடி?

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:26 IST)
16வது ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான வீரர்களை ஏலம் இன்று நடைபெற உள்ளது. 
 
இன்று கொச்சியில் நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 87 வீரர்கள் ஏலம் எடுக்க உள்ளதாகவும் 405 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரனை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட பல அணிகள் முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பென் ஸ்டோக்ஸ் உள்பட பல வீரர்கள் இன்று ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்