ஐபிஎல்-2023: டூபிளசிஸ், மேக்ஸ்வெல் அரைசதம் விளாசல்.....மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (21:43 IST)
ஐபிஎல் போட்டியின் 54ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. 
 

இந்த போட்டியின் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எனவே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டுபிளசிஸ் அரைசதம் விளாசி 65  ரன்கள் சேர்த்தார். அதேபோல், மேக்ஸ்வெல் 68 ரன்கள் அடித்தார். கார்த்தி 30 ரன்களும், ஹசரங்கா 12  ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை அணி தரப்பில் ஜேசன் 3 விக்கெட்டுகளும், ஜோர்டன், மேத்வல் மற்றும் கிரீன்  தலா 1 விக்கெடும் கைப்பற்றினர்.

தற்போது பேட்டிங் செய்துவரும் மும்பை அணி 4 பந்துகளுக்கு 4 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்