டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (19:04 IST)
ஐபிஎல் போட்டியின் 54ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. 
 
இந்த போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பெங்களூர் அணியினர் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த போட்டிகளில் புள்ளி பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணியை 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என்பதால் இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்