மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.
சமீபகாலமாக இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் அணி மீது அழுத்தம் அதிகமாக உள்ளது.