பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (11:28 IST)
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது
 
இதனை அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றார் 
 
இந்த நிலையில் 2 - 0 என்ற கணக்கில் தற்போது ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்