இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… முதல் 2 போட்டிகளுக்கான அணி அறிவிப்பு!

vinoth
சனி, 13 ஜனவரி 2024 (07:56 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார். இஷான் கிஷானுக்கு பதில் துருவ் ஜெரலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷமி அணியில் இடம்பெறவில்லை.

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்