நான்காவது டெஸ்ட்டை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

vinoth

திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:42 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய  இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் சேர்த்தது. இந்த வெற்றியின் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்