விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், '' இன்னும் 2-3 நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். . அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும். இந்தியா கூட்டணியில் தொடரக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு விசாரணை ஏஜென்ஸிகளை கண்டு பயமில்லை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் ''என்று கூறியது குறிப்பிடத்தக்கது.