நாங்கள் 10 விக்கெட்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.. இங்கிலாந்து பவுலர் நம்பிக்கை!

vinoth

திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:48 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து  இரண்டாவது இன்னிங்ஸை முன்னிலையோடு தொடங்கிய இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன.

மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை இந்த சூழ்நிலையில் இருந்தும் தங்களால் வெல்ல முடியும் என இங்கிலாந்து பவுலர் ஷோயப் பஷீர் கூறியுள்ளார். அதில் “ஆடுகளம் மெல்ல மெல்ல சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் எப்படி பந்துவீசினார்கள் என்பதை கவனித்தோம். அதுபோல  நாங்களும் நாளை (இன்று) ஹீரோவாக முடியும். எங்களால் 10 விக்கெட்களையும் வீழ்த்த முடியும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்