இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (20:09 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
 
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
அடுத்து பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய விராட் கோஹ்லி 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னால் ரோஹித் ஷர்மாவோடு ஜோடி சேர்ந்த அம்பாத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் மற்றும் ராயுடு இருவரும் சதமடித்தனர். சதத்துக்குப் பின் அதிரடி காட்டிய ரோஹித் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பாத்தி ராயுடு 100 ரன்களில் ஆட்டமிழந்து ரன் அவுட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் இறங்கிய தோனி 23, கேதார் ஜாதவ் 16, ஜடேஜா 7 ரன்கள் சேர்த்தனர்.
 
இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்தது. 
 
இதன் பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய துவக்கம் முதலே சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது. அனைத்து வீரர்களும் சொதப்பலாகவே விளையாடி வந்த நிலையில் ஹோல்டர் மட்டும் சற்று நம்பிக்கை தரும் விதமாக விளையாடினார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்