டாஸ் வெண்ரு முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய விராட் கோஹ்லி 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னால் ரோஹித் ஷர்மாவோடு ஜோடி சேர்ந்த அம்பாத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் மற்றும் ராயுடு இருவரும் சதமடித்தனர். சதத்துக்குப் பின் அதிரடி காட்டிய ரோஹித் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பாத்தி ராயுடு 100 ரன்களில் ஆட்டமிழந்து ரன் அவுட் ஆகி தனது விக்கெடை இழந்தார். அதன் பின் இறங்கிய தோனி -23, கேதார் ஜாதவ் -16, ஜடேஜா- 7 ரன்கள் சேர்த்தனர்.