உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்தியாவுக்கு சிக்கல்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (15:54 IST)
உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் இருந்த இந்திய அணி இப்போது இறுதி போட்டிக்குள் நுழைவதில் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

உலக டெஸ்ட் அணிகளுக்கான சாம்பியன் ஷிப் போட்டி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு உள்நாட்டுத் தொடரிலும் ஒரு வெளிநாட்டு தொடரிலும் விளையாடவேண்டும். இந்திய அணி தற்போது நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தரவரிசையில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகளே பெற்றுள்ளது.

ஆனால் கொரோனா காரணமாக பல டெஸ்ட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இறுதி போட்டிக்கு செல்லும் அணியை தேர்வு செய்வதில் புதிய முறையை ஐசிசி பின்பற்ற வுள்ளது. ஒவ்வொரு அணியும் பெற்றுள்ள புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இதனால் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் மீதியுள்ள தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்