நாளை 2வது டி20 போட்டி: இந்தியா- இங்கிலாந்து மோதல்

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (16:01 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நாளை கார்டிப்பில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடவுள்ளது. இதில் டி20 போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இருஅணிகளும் மோதும் 2வது டி20 போட்டி நாளை கார்டிப் நகரில் நடக்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் விளையாடவுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்