ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி இன்று அறிவிப்பு?

vinoth

சனி, 4 அக்டோபர் 2025 (08:49 IST)
கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மிகவும் பிஸியான அணியாக உள்ளது இந்தியா. கிட்டத்தட்ட மூன்று வடிவங்களுக்கும் தனித்தனியாக அணியே இந்தியாவிடம் உள்ளது. அதனால் தொடர்ச்சியாக போட்டிகளை விளையாடி வருகிறது.

கடந்த வாரம் டி 20 வடிவில் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வெற்றி பெற்ற இந்தியா, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.

அந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான அணியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. இருவரும் கடந்த 9 மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்