இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய நிலையிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5வது விக்கெட்டையும் சற்றுமுன் இழந்தது.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடியது.
அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் சொற்ப ரன்களில் அவுட் ஆனதை அடுத்து கேப்டன் ஜோரூட் மட்டும் தோல்வியைத் தவிர்க்கப் போராடினார். இங்கிலாந்து அணி டிரா செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையயில் இதற்கு அடுத்த வந்த விக்கெட்டுகளும் வேகமாகச் சரிந்தன. எனவே இங்கிலாந்து எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
எனவே லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா3 , சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.