உலக கோப்பை யுத்தத்தில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (15:27 IST)
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதுகிறது.


 

 
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைப்பெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதுகிறது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை ஆஸ்திரேலிய அணியை அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றது.
 
பெண்கள் இந்திய அணி உலக கோப்பை வென்றால் அது 2011ஆம் ஆண்டை விட பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்