டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு உத்வேகம் அளித்தேன்- யுவராஜ்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (20:51 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா – இந்தியா ஆட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. .

அடுத்த போட்டிகளுக்குள் அவர் குணமாகி வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள இந்திய அணியோடு செல்லாத அவர் சென்னையில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். இப்போது அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சுப்மன் கில்லுக்கு ஆறுதல் கூறி உத்வேகம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 2011 ஆம் தேதி உலகக் கோப்பை எப்படி புற்று நோயுடன் போராடிக் கொண்டே விளையாடினேன் என்பதைக் கூறி டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு உத்வேகம் அளித்தேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்