நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அவரும் பதிலுக்கு விராட் கோலியை ட்ரோல் செய்தார்.
அதில் “கோலியிடம் சென்று கைகொடுத்தேன். அவர் கைகொடுத்து, நமக்குள் நடக்கும் மோதலை இப்போதே முடித்துக் கொள்வோம் எனக் கூறினார். அதற்கு நான் நாம் இருவரும் சேர்ந்தே முடித்துக் கொள்வோம் எனக் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.