ஆஸி அணிக்கு எதிராக 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்து சிக்ஸ் மழை பொழிந்த கிளாசன்… தென்னாப்பிரிக்கா பிரம்மாண்ட வெற்றி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (07:03 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி அங்கு டி 20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.


இதையடுத்து இப்போது ஒருநாள் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 416 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹெண்ட்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 174 ரன்கள் சேர்த்தார்.

அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும், 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் பிறகு 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய ஆஸி அணி 34.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்