தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது ODI-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (13:02 IST)
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 123  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி   5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான2 வது போட்டி இன்று  நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது.  இதில், டேவிட் வார்னர், லபுசேன் இருவரும் சதம் அடித்தனர்.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 41. ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே ஆஸ்திரேலியா அணி 123  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்