இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் மொயின் அலி விளையாட மாட்டார் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் தோற்றது. எனவே இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் இங்கிலாந்து புகழ்ந்து இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது கூற்றை பொய்ப்பிக்கும்படி,இன்று இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியை இந்திய அணி வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி விளையாடமாட்டார் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் மொயின் அலி ஒய்வுக்கான இங்கிலாந்து திரும்பவுள்ளார். அவருக்குப் பதிலாக ஜானி பேர்ஸ்டோவ், வுட் இங்கிலாந்து அணியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.