வாத்தி கம்மிங்.. ஒத்தே.. மைதானத்தில் ஆடிய அஸ்வின்! – வைரலான வீடியோ!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:39 IST)
இந்தியா – இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மைதானத்தில் மாஸ்டர் பட டான்ஸ் ஆடியது வைரலாகி வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் ஆட்டத்தின் இறுதியில் வெற்றிபெற உள்ள தருவாயில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் பிரபல மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் வருவது போல தோள்பட்டையை ஆட்டி ஆடினார். அதை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்