நாங்க செய்த சில தவறுகளால மேட்ச இழந்துட்டோம்… ஹர்திக் பாண்ட்யா பேட்டி!

Webdunia
புதன், 24 மே 2023 (08:51 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியின் குவாலிஃபையர் ஒன்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் தோற்ற பின் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டியளிக்கும் போது செய்த தவறுகள் பற்றி பேசியுள்ளார்.

அதில் “நாங்கள் சரியாகதான் விளையாடினோம். ஆனால் சில அடிப்படையான விஷயங்களில் தவறு செய்துவிட்டோம். அது எங்களுக்கு தோல்வியை கொடுத்துவிட்டது. எங்களிடம் இருக்கும் பௌலிங்கை வைத்து பார்க்கும் போது கூடுதலாக 15 ரன்களை விட்டுக் கொடுத்தோம். இப்போது தோல்வியைப் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. அடுத்த போட்டியில் வென்று மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஞாயிற்றுக் கிழமை பைனலில் சந்திப்போம் என நம்புகிறேன். நாளை (இன்று) என் சகோதரர் அணி விளையாடும் போட்டியைக் காண ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்