கோலியின் டி 20 எதிர்காலம் பற்றிய கேள்விக்கு கில் பற்றி பேசிய கவாஸ்கர்!

Webdunia
புதன், 24 மே 2023 (08:41 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, கடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி 20 அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆவர் 650 ரன்கள் சேர்த்துள்ளார். அது மட்டுமில்லாமல் பேக் டு பேக் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். இதனால் அவரின் டி 20 எதிர்காலம் பற்றி முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கவாஸ்கர் “இப்போது நாம் கோலியின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதை விட ஷுப்மன் கில் அடித்த சதம் பற்றிதான் அதிகம் பேசவேண்டும்.  கோலியின் இன்னிங்ஸை கம்பீரமான கில்லின் இன்னிங்ஸ் மறக்கடித்துவிட்டது. அதனால் இப்போது கோலியின் எதிர்காலத்தை விட கில்லின் சதம் பற்றியே நாம் பேசவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்