ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் வெறுப்பேத்திய ரசிகர்கள்… கோபமான வர்ணனையாளர் சொன்ன வார்த்தை!

vinoth

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:12 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அன்று முதல் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி இரண்டையுமே தோற்றுள்ளது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அவர் மைதானத்தில் இருக்கும்போதோ, பேட் செய்யும் போதோ அவரை வெறுப்பேத்தும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அப்போது ஹர்திக் டாஸ் போட வந்த போது அவருக்கு எதிரான கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் இந்த கோஷத்தின் சத்தம் காதைக் கிழிக்கும் அளவுக்கு சென்ற நிலையில் அப்போது வர்ணனையாளராக இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் “ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்” என ரசிகர்களைப் பார்த்து சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்