பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது மான்செஸ்டரில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் பலாத்கார புகார் குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாகக்கவனம் செலுத்தி, ஹைதர் அலியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. விசாரணை முடிவடையும் வரை அவர் இடைநீக்கத்தில் இருப்பார் என்றும், இதுகுறித்து தாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.