ஒரு ரன் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன மட்டமான அணி! உலக அதிசய கிரிகெட்!

Webdunia
சனி, 18 மே 2019 (10:02 IST)
மாநில அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் அணியில் இடம் பெற்ற அனைவரும் போல்ட் ஆகி விக்கெட்களை இழந்த உலக அதிசய கிரிக்கெட் போட்டி கேரளாவில் நடந்துள்ளது.

 
சமீபத்தில் கேரளாவில் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் வயநாடு மற்றும் காசர்கோட் பெண்கள் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காசர்கோட் அணியை ஒரு ரன் கூட எடுக்கவிடாமல் ஆல் அவுட் செய்தனர் வயநாடு அணி .  மேலும் 10 விக்கெட்களும் போல்ட் ஆகித்தான் விக்கெட் செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,வயநாடு அணி 4 எஸ்ட்ராஸுகள் போட்டுள்ளனர். எனவே  5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய வயநாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் காசர்கோட் அணியை வீழ்த்தியது.
 
இது மாநில அளவிலான போட்டி என்றாலும் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு போட்டியை இதற்கு முன்பு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் 400 வருட கிரிக்கெட் போட்டியில் இது உலக அதிசய கிரிக்கெட் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்