திரையரங்கில் பட்டாசு வெடித்த பிரபல நடிகரின் ரசிகர்கள்: தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..!

செவ்வாய், 23 மே 2023 (10:18 IST)
பிரபல நடிகரின் ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடியதை அடுத்து திரையரங்கு தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். இவரது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இவரது சூப்பர் ஹிட் படமான சிம்ஹாத்ரி என்ற திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. 
 
இந்த படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாடுவதற்காக ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் விஜயவாடாவில் உள்ள ஒரு திரையரங்கில் குவிந்தனர். அப்போது திரையில் ஜூனியர் என்டிஆர் தோன்றியபோது ஆர்வம் மிகுதியால் சில ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தனர். இதனால் திரையரங்கில் உள்ள இருக்கைகள் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவசர அவசரமாக ரசிகர்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின் தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். திரையரங்கில் உள்ள பெரும்பாலான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்