சீட்ல இருந்து விழுந்துட்டேன்.. கூஸ்பம்ப்ஸ் ஆன கோலி! – இந்திய அளவில் ட்ரெண்டான தல தோனி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (09:56 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் இறுதி ஆட்டத்தை கண்டு சீட்டிலிருந்து குதித்துவிட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் நேற்று நடைபெற்ற ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 172 ரன்கள் குவித்தது.

அடுத்ததாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடியது. ருதுராஜ் 70 ரன்களும், உத்தப்பா 63 ரன்களும் குவித்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர். 19வது ஓவரில் 160 ரன்கள் பெற்றிருந்த நிலையில் மொயீன் அலியும் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் உக்கிரம் காட்டிய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து விளாசி சிஎஸ்கேவுக்கு வெற்றியை கைப்பற்றி தந்தார். அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி “மீண்டும் பேரரசன் திரும்ப வந்துவிட்டார். மறுபடியும் என் சீட்டிலிருந்து இன்று இரவு எகிறி குதித்து விட்டேன்” என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா முழுவதும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தோனியின் சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்