இப்பதான் நிம்மதியா தூங்க போறோம்… ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளசிஸ்!

vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (08:24 IST)
நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பமே அடித்து ஆட முயன்றது. அந்த அணியின் கோலியும், பட்டிதாரும் நின்று விளையாடி ஆளுக்கு ஒரு அரைசதம் வீழ்த்தி அணியின் ரன்களை உயர்த்தினர்.

கேமரூன் க்ரீன் 20 பந்துகளுக்கு 37 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவர் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்து 207 ரன்களை சன்ரைசர்ஸ்க்கு டார்கெட் வைத்துள்ளது.

இதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் அதிரடியைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த சீசனில் 7 போட்டிகளில் தோற்று 10 ஆவது இடத்தில் இருந்த ஆர் சி பி இந்த போட்டியின் மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளசீஸ் “கடந்த இரண்டு போட்டிகளாக நாங்கள் எதிரணிக்கு நல்ல அழுத்தம் கொடுத்தோம். ஐதராபாத் அணிக்கு  எதிரான போட்டியில் 260 ரன்கள் சேர்த்தோம். கடைசிப் போட்டியில் ஒரு ரன்னில் தோற்றோம். இப்போது இந்த வெற்றியால் நிம்மதியாக உறங்குவோம். வீரர்களிடம் நாம் என்னதான் அறிவுரை கூறினாலும், வெற்றிதான் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். இப்போது கோலியை தவிர்த்து பிறவீரர்களும் ரன்கள் சேர்க்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்