ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை வரவைக்கவேண்டும்… தொடர் தோல்வி குறித்து டு பிளசீஸ் கருத்து!

vinoth

திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:45 IST)
இந்த சீசன் ஐபிஎல் ஆர் சி பி அணிக்கு அவர்கள் எதிர்பார்க்காத விதமாக மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் அந்த அணி ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளது. இதனால் கிட்டத்தட்ட அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி வெற்றியின் விளிம்பில் இருந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதைப் பார்த்த ஆர் சி பி ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் கேப்டன் பாஃப் டு பிளசிஸ் தொடர் தோல்வி குறித்து பேசும்போது “எங்களுக்கு மிகச்சிறப்பான ரசிகர்கள் பட்டாளம் கிடைத்துள்ளது. அவர்களின் முகத்தில் நாங்கள் சிரிப்பை வரவழைக்க வேண்டும். அதற்காக எங்கள் கடின உழைப்பை செலுத்துவோம். இனி அனைத்தையும் மாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்