இங்கிலாந்து வீரர்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு! – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (09:21 IST)
பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்காக சென்றுள்ள இங்கிலாந்து வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் போட்டி தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடர் விளையாட உள்ளதால் இந்த தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ராவல்பிண்டியில் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் வந்த இங்கிலாந்து வீரர்களில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்பட 13 பேருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதனால் போட்டியை தள்ளிவைப்பது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்