பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (15:09 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாது டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்த டெஸ்ட்டில்  முதலில் பேட் செய்த் இங்கிலாந்து அணி 275 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய 281 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடி வரும் நிலையில், 3 விக்கெட்களை இழந்து 117 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அணியின் முக்கிய வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் விக்கெட்களை இழந்துள்ளது.

வெற்றிக்கு இன்னும் 237 ரன்க்ள் தேவை என்னும் நிலையில் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்