மரியாதை தானாக வராது… நமது செயல்தான் அதை தீர்மானிக்கும்- கேப்டன்சி குறித்து தோனி!

vinoth

சனி, 10 பிப்ரவரி 2024 (08:00 IST)
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோனி கேப்டன்சி குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “எப்பொதும் மரியாதையை அதிகாரத்தின் மூலம் பெறமுடியாது. நாம் என்ன பேசினாலும் நம் செயல்கள்தான் நமக்கான மரியாதையைப் பெற்றுத்தரும். சில நேரங்களில் நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் போதும். அனைத்து வீரர்களின் தனிப்பட்ட குணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் புரிந்துகொண்ட பின்னர் அவற்றை அவர்களுக்கு சொல்லாமலேயே நாம் அதை சரி செய்யவேண்டும். எப்போதும் திட்டங்களை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்