சி எஸ் கே அணியின் புதிய ஸ்பான்சராக இணைந்த விமான நிறுவனம்!

vinoth

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:44 IST)
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தங்களின் புதிய ஸ்பான்சரை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிகாட் சி எஸ் கே அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் கால்பந்து அணிகளுக்கு அடுத்து முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் ஸ்பான்சராக இனைந்துள்ளது எதிகாட்.

இதுகுறித்து பேசியுள்ள எதிகாட் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி “சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. நாங்கள் பல முறை சிறந்த விமான சேவைக்கான விருதுகளை வென்றுள்ளோம்.  இனி இருவரும் இணைந்து பட்டங்களை வெல்வோம்.” எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்