புதிய இஸ்ரோ தலைவராக தமிழர் நாராயணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
#Chandrayaan2, #Chandrayaan3, #AdityaL1, #Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் #Narayanan அவர்களின் தலைமையில் #ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!