’தல’ தோனியின் விழிப்புணர்வு..இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (19:42 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை சென்னை சூப்பஸ் கிங்ஸ் அணியும்- மும்பை அணியும் மோதவுள்ள நிலையில் இன்று சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் முகமூடி அணிய வேண்டுமெனவும்  பொதுசுகாதார பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்