ஐபிஎல் தொடர்: மும்பைக்கு பறந்த சென்னை வீரர்கள்

புதன், 4 ஏப்ரல் 2018 (10:46 IST)
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி வீரர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
 
இதில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோத உள்ளன. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில வாரமாக சென்னை அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில், வரும் 7-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று மும்பைக்கு சென்றுள்ளனர். அவர்கள் விமானநிலையத்தில் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்