விராட் கோலி தன்னுடைய நூறாவது சதத்தை எப்போது அடிப்பார்?… Chat GPT கணித்து சொன்ன தேதி!

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (08:02 IST)
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.

சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் அந்த டி 20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த கோலியின் புகைப்படம்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

விராட் கோலி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50 ஆவது சதத்தை அடித்தார். இதன் மூலம் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். தற்போது சர்வதேசப் போட்டிகளில் 80 சதங்கள் அடித்துள்ள கோலி, எப்போது தனது 100 ஆவது சதத்தை அடிப்பார் என சாட் ஜிபிடி கணித்துக் கூறியுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விராட் கோலி அந்த சாதனையை நிகழ்த்துவார் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்