பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் இணை செயலாளரின் தாயார் மரணம்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:15 IST)
பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் இணை செயலாளர் அவிஷேக் டால்மியாவின் தாயார் சந்திரலேகா இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். 
 
முன்னாள் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மனைவி சந்திரலேகா இன்று 72 வயதில் உயிரிழந்தார். இவரது மகள் பைசாலி மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 
 
கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதி அஞ்சலியில் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கிரேம் ஸ்மித், மொஹமட் அஷூருதின், இந்தியாவின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்