கோலாகலமான வரவேற்புடன் களமிறங்கும் கொல்கத்தா! – புர்ஜ் கலிபாவில் ட்ரிபியூட்!

புதன், 23 செப்டம்பர் 2020 (12:49 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட உள்ள நிலையில் அந்த அணியை வரவேற்கும் வகையில் புர்ஜ் கலிபாவில் வீடியோ திரையிடப்பட்டுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது. முன்னதாக முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோதி தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸுக்கு இது இரண்டாவது ஆட்டம். ஆனாக் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு இது முதல் ஆட்டம்.

இந்நிலையில் முதலாவது ஆட்டத்தை தொடங்க உள்ள கொல்கத்தா அணியை வரவேற்கும் விதமாக உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் கொல்கத்தா அணிக்கு வண்ண விளக்குகளால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ல் கடைசியாக கோப்பை வென்ற பிறகு இத்தனை ஆண்டுகளாக கொல்கத்தா அணி கோப்பை வெல்லாமல் உள்ளது. இந்த முதல் ஆட்டமே வெற்றியை தொட்டு கொல்கத்தா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

شكران

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்