சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
இந்த போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு திலக் வர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். திலக் வர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடி 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.