பேட்டிங் செய்ய தயங்கும் தோனி..? ஏன் இந்த திடீர் சங்கடம்??

புதன், 23 செப்டம்பர் 2020 (09:51 IST)
நேற்று நடைபெற்ற போட்டியில் கடைசியாக களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
முதலாவதாக களம் இறங்கிய முரளி விஜய், வாட்சன் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக டூ ப்ளெஸிஸ் தன்னால் இயன்ற அளவு ஆட்டத்தை இழுத்து பிடித்தார். பின்னதாக களம் இறங்கிய கெயிக்வாட் இறங்கி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
 
இந்நிலையில் கேப்டன் தோனி கடைசியாக களம் இறங்கியபோது ரன்களை அதிகப்படுத்த வேண்டிய சூழல். கடைசி ஓவரில் அதிரடியாக களம் இறங்கிய தோனி வரிசையாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். தோனி 7வது இடத்தில் இறங்குவதற்கு பதில் 3 அல்லது 4வது இடத்தில் இறங்கியிருந்தால் ஆட்டம் சிஎஸ்கே வசம் இருந்து இருக்கும் என கருதப்படுகிறது. 
 
இதனிடையே கடைசியாக களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை, 14 நாள் தனிமைப்படுத்தல் உதவவில்லை. சாமுக்கு வாய்ப்புகளை வழங்க முயற்சித்தோம். ஃபாஃப் நன்றாக விளையாடினார். அதேபோல ஸ்வீவ் மற்றும் சாம் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 
 
நாங்கள் எதிர் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் பிழை செய்துவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்