இந்திய கிரிக்கெட்டின் இளைய நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, ஆஸ்திரேலிய அண்டர்-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் வெறும் 78 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில், வைபவ் 86 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் வரலாற்றில், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லத்துக்குப் பிறகு, 100 பந்துகளுக்குள் இரண்டு சதங்களை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார்.
இதற்கு முன், அவர் கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்தார். இந்த இடது கை ஆட்டக்காரரான இவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.