சொந்த அணியின் ரசிகர்களே திட்டினால் என்ன செய்யமுடியும்?- ஹர்திக் குறித்து பும்ரா!

vinoth

வெள்ளி, 26 ஜூலை 2024 (09:18 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.

அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரைக் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.

இந்நிலையில் இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா பேசியுள்ளார். அதில் “இந்தியாவில் எமோஷன் எப்போதும் ஒரு விவாதத்துக்குரிய பொருள்தான். வீரர்களே சில நேரம் எமோஷனலாக இருப்பார். ஆனால் இந்திய அணிக்காக ஆடும் போது அது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆனால் சொந்த அணியின் ரசிகர்களே திட்டினால் நாம் என்ன செய்ய முடியும்?

ஆனால் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் அது மாறிவிட்டது. அதனால் ரசிகர்களின் எதிர்ப்பை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த சமயத்தில் ஹர்திக்கோடு பேசி ஆதரவாக இருந்தோம்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்