ருத்துராஜுக்கு கிடைக்கும் ஆதரவு… தேர்வுக்குழுவை கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்!

vinoth

சனி, 20 ஜூலை 2024 (16:44 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து டி 20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து இப்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிர்ச்சியை விட ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருப்பது இந்திய அணியில் ருத்துராஜ் இடம்பெறாததுதான்.

ஏனென்றால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்து வந்தார் ருத்துராஜ். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என முன்னாள் வீரர்களான ஸ்ரீகாந்த், பத்ரிநாத் மற்றும் விமர்சகரான ஹர்ஷா போக்லே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல ரசிகர்கள் மத்தியில் சமூகவலைதளங்களில் பிசிசிஐ சம்மந்தமாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்